ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், கல்யாணிபுரத்தில் இளைஞர்கள் மற்றும் கர்ப்பிணிகளிடையே எச்.ஐ.வி. தொற்று இல்லா புதிய உலகம் படைப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் இணைந்து இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்தியது.
சிவகாசி, அம்மாபட்டி கலைசுடர்மணி கே.பால்ராஜூன் வெண்மணி கலைக்குழுவினர் நாட்டுப்புறக் கலைகள் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கல்யாணிபுரத்தில் ஊராட்சி மன்றத் தலைவி பேச்சியம்மாள் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இளைஞர்களிடம் ஒயிலாட்டம் மூலமும், கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் முறைகள் குறித்து கரகாட்டம் மூலமும், ஆணுறையின் பயன்பாடு குறித்து பாடல்கள் மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

