மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நாளை நந்தனார் குருபூஜை விழா!

புரட்டாசி மாத ரோகினி நட்சத்திரமான புதன்கிழமை திருநாளைப் போவார் (நந்தனார்) குருபூஜை நடராஜர் கோயிலில் நடைபெறுகிறது. ஸ்ரீ நடராஜர் கோயிலில் இரவு 7 மணிக்கு (நந்தனார் ) திருநாளைப் போவார்

News image
Updated On :24 செப்டம்பர் 2013, 2:08 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் குருபூஜை விழா (செப்.25) புதன்கிழமை நடைபெறுகிறது.

புரட்டாசி மாத ரோகினி நட்சத்திரமான புதன்கிழமை திருநாளைப் போவார் (நந்தனார்) குருபூஜை நடராஜர் கோயிலில் நடைபெறுகிறது. ஸ்ரீ நடராஜர் கோயிலில் இரவு 7 மணிக்கு (நந்தனார் ) திருநாளைப் போவார் (நந்தனார்) உருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. இரவு எட்டுமணிக்கு ஸ்ரீ நடராஜர் சன்னதியில் முக்தி கொடுக்கும் ஐக்கிய காட்சி நடைபெறுகிறது. முன்னதாக காலையில் நந்தனார் வழித் தோன்றல்கள் வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

நந்தனார் மடத்தில் குருபூஜை: சிதம்பரம் ஓமக்குளத்தில் ஸ்ரீநந்தனார் மடத்தில் நந்தனார் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெறுகிறது. குருபூஜையை முன்னிட்டு நந்தனார் மடத்தில் உள்ள நந்தனார் கோயிலில் நந்தனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நந்தனார் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் மா.செ.சிந்தனைச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சுவாமி சகஜானந்தா கல்வி வளர்ச்சிக்கழக இயக்குநர் ரா.காவியச்செல்வன், செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன், பொருளாளர் ரா.ஜவகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், அ.கலியமூர்த்தி, மு.ஆ.தமிழ்க்குமரன், வழக்குரைஞர் க.தமிழ்மாறன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். குருபூஜையை முன்னிட்டு உரிமை மீட்பு போராளி நந்தனார் என்ற தலைப்பில் புலவர் தி.பொன்னம்பலம் சொற்பொழிவாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.