கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

நாகை கோட்டைவாசல்படி, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் கோ. சேகர்(42). ஒருகொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன.  கடந்த மார்ச் மாதம் குண்டர் சட்டத்தில்

News image
Updated On :24 செப்டம்பர் 2013, 12:45 pm

சங்கர்

போலீஸாரின் கெடுபிடி நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றக் கோரி நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

நாகை கோட்டைவாசல்படி, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் கோ. சேகர்(42). ஒருகொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன.  கடந்த மார்ச் மாதம் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட இவர், அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.போலீஸார் அடிக்கடி தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்வதாகவும், தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் முயற்சிப்பதாகவும் புகார் தெரிவித்து கோ. சேகர் கடந்த 16-ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்த நிலையில், சேகர் மற்றும் அவரது மனைவிகள் லதா, வள்ளி மற்றும் குழந்தைகள், தாய், மைத்துனிகள் உள்பட 8 பேர் ஒரு மண்ணெண்ணெய் கேனுடன் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்குள் நுழைந்தனர்.பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்ட கோ. சேகர், போலீஸாரின் கெடுபிடிகளிலிருந்து தன்னை காப்பாற்றக் கோரி முழக்கம் எழுப்பியவாறு,மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்றார்.அவரது குடும்பத்தினருடன் அவருடன் ஆட்சியரகத்துக்குள் நுழைய முன்றனர்.அப்போது, அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற போலீஸார், ஆட்சியரக பிரதான வாயில் அருகே சேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை மறித்தனர். இதனால்,அந்தப் பகுதியில் திடீர் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, ஆட்சியரக வாயிலுக்கு வந்து, தீக்குளிப்பு முயற்சி மேற்கொண்ட சேகரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, அவர் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டார்.பின்னர், அங்கிருந்து வெளியேற முயன்ற சேகரை நாகூர் போலீஸார் மறித்து கைதுசெய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுச் சென்றனர்.இது குறித்து நாகூர் காவல் நிலையத்தில் கோ. சேகர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.