தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நான் கோபப்பட்டால் கூட்டணி கிடையாது: விஜயகாந்த்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜரானார்.பின்னர் ரிசிவந்தியம் தொகுதியில் நூரோலை

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 9:38 am

ச.​ கார்த்​தி​கே​யன்

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜரானார்.பின்னர் ரிசிவந்தியம் தொகுதியில் நூரோலை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடையை திறந்துவைத்தார்.தொடர்ந்து அத்தியூர் ரேசன் கடையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் பகண்டை கூட்ரோடு சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் 114 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகளை வழங்கிய விஜயகாந்த் பேசியதாவது:-

நான் தொகுதிக்கு வருவது இல்லை என பலர் கூறுகிறார்கள்.கடந்த 3 மாதங்களாக விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் வரவில்லை.அரசை எதிர்த்து பேசினால் குடித்துவிட்டு பேசுகிறேன் என்று வதந்தி பரப்புகிறார்கள்.காவல்துறையினர் சாதிக்க பிறந்தவர்கள்.ஆனால் அவர்களது தற்போதைய நிலைமை அப்படி இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கின்றனர்.ஆனால் நான் கோபப்பட்டால் கூட்டணி கிடையாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.