வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தென்காசி: அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

அதிமுக: தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு. வசந்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரும், தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஷ்வரியிடம் வேட்புமனுத்தாக்கல்

News image
Updated On :1 ஏப்ரல் 2014, 9:50 am

ஷேக் அப்துல்காதர்

தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர், மதிமுக வேட்பாளர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

அதிமுக: தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மு. வசந்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரும், தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஷ்வரியிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன், பி.எச். மனோஜ்பாண்டியன் எம்.பி, நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ். நாகூர்மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாற்று வேட்பாளராக பாளையங்கோட்டை ஜோதிபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த மு. பரமசிவன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

மதிமுக: தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சதன்திருமலைக்குமார், தொகுதி தேர்தல் அலுவலர் உமாமகேஷ்வரியிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. அன்புராஜ், தேமுதிக மேற்கு மாவட்டச் செயலர் ஐயம்பெருமாள், பாமக மாநில துணைப்பொதுச்செயலர் திருமலைக்குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.