வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ. 18.70 கோடி

கையிருப்பு ரொக்கம் ரூ. 50 ஆயிரம், ரூ. 2 கோடிக்கு (முழு காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது) ஆயுள் காப்பீடு பாலிசிகள், வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 1 கோடி 14 லட்சத்து 12 ஆயிரத்து 206

News image
Updated On :2 ஏப்ரல் 2014, 1:42 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரத்தின் சொத்து மதிப்பு ரூ. 18.70 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரம் சொத்துக்கள் விவரம் வருமாறு:

அசையும் சொத்து விவரங்கள்:

கையிருப்பு ரொக்கம் ரூ. 50 ஆயிரம், ரூ. 2 கோடிக்கு (முழு காப்பீட்டு தொகை செலுத்தப்பட்டது) ஆயுள் காப்பீடு பாலிசிகள், வங்கிகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 1 கோடி 14 லட்சத்து 12 ஆயிரத்து 206 மற்றும் ரூ. 32.20 லட்சம் மதி்ப்புள்ள டெம்போ டிராவலர் வேன் ஒன்றும், ரூ. 4.32 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கநகைகள் உள்பட மொத்தம் ரூ. 3 கோடி 14 லட்சத்து, 62 ஆயிரத்து 206 உள்ளது.

அசையாத சொத்து விவரங்கள்:

திருநெல்வேலி மாவட்டம் கடையம், காஞ்சிபுரம் மாவட்டம், நெல்லிக்குப்பம், திருப்போரூர் பகுதியில் ரூ. 1.75 கோடி மதிப்பில் விவசாய நிலங்களும், ரூ. 4.10 கோடி மதிப்பில் விவசாயம் சாராத நிலமும், ரூ. 9.70 கோடி மதிப்புள்ள நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியன உள்பட ரூ. 15.55 கோடி மதிப்பில் அசையாத சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உறுதிமொழி ஆணவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.