ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பச்சை புளிய மரத்தில் தீ

ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் நெடுஞ்சாலை ஓரம் கம்மாப்பட்டியை அடுத்துள்ள பொன்னாங்கன்னி-கண்ணன் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே சுமார் 60 ஆண்டு பழமையான பச்சை

News image
Updated On :5 ஏப்ரல் 2014, 11:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை மாலை பச்சை புளிய மரம் சுமார் 3 மணி நேரம் தீப்பற்றி எரிந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்-மம்சாபுரம் நெடுஞ்சாலை ஓரம் கம்மாப்பட்டியை அடுத்துள்ள பொன்னாங்கன்னி-கண்ணன் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே சுமார் 60 ஆண்டு பழமையான பச்சை புளிய மரம் உண்டு. இந்தச் சாலையில் வழி நெடுக சுமார் 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உண்டு.

சனிக்கிழமை மாலை குறிப்பிட்ட மரத்தினுள் இருந்து புகை வந்து கொண்டே இருந்துள்ளது. திடீரென தீ சுடர் விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதற்குள்ளாக தீ வேகமாக எரிய ஆரம்பித்தது. இந்த வேலையில் இந்தச் சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியிலிருந்து  வீட்டிற்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள் வந்தது. இதிலிருந்து ஆட்டோ டிரைவர்கள் மாணவர்களின் தண்ணீர் பாட்டில்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்டவை கொண்டு தீயை அணைத்தனர்.

இது குறித்து அப் பகுதியினர் கூறுகையில், இப் பகுதியில் திரியும் சிலரோ, அல்லது பள்ளி விடுமுறையில் உள்ள மாணவர்களோ தான் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க முடியும். ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்படும் இந்தக் காலத்தில் சுமார் 60 ஆண்டு கால பழமை வாயந்த பச்சை மரத்தை தீ வைத்து எரித்து நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.