வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் கொள்ளை
சென்னை செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மாதவரம் பால்பண்ணை


சென்னை செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணையில் வழக்கறிஞர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மாதவரம் பால்பண்ணை போலீஸார் விசாரணை.
செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணை சுப்பிரமணியநகரைச் சேர்ந்த பாலமுருகன்(40). இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில், பாலமுருகன் மனைவியை அழைத்து வர 6-ந்தேதி ஞாயிற்றுகிழமை மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டு கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். உடனே மாதவரம் பால்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...