வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி: 7 மனுக்கள் தள்ளுபடி, 30 மனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 30 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 3 மாற்று வேட்பாளர்கள் உள்பட 7 பேரின்

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 11:09 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 30 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 3 மாற்று வேட்பாளர்கள் உள்பட 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து 30 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வழக்குரைஞர் கே.ஆர்.பி. பிரபாகரன், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் சி. தேவதாசசுந்தரம், காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.எஸ். ராமசுப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக சார்பில் எஸ். சிவனணைந்தபெருமாள், எஸ்.டி.பி.ஐ. கட்சியில் வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக், ஆம் ஆத்மி வேட்பாளர் மை.பா. ஜேசுராஜ், இந்திய மக்கள் கழக நிறுவனத் தலைவர் தி. தேவநாதன்யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் தி. தேவேந்திரன் உள்பட 37 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

திங்கள்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலர் மு. கருணாகரன் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக மாற்று வேட்பாளர் சுதா கே. பரமசிவன், காங்கிரஸ் மாற்று வேட்பாளர் தமிழ்செல்வன், தேமுதிக மாற்று வேட்பாளர் ஜெயபாலன் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தவிர சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த ஜெயராஜ், முருகேசன், சண்முகராஜா, பி. ராமனாதன் ஆகியோரின் மனுக்கள் தேவையான ஆவணங்கள் இல்லாததால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 30 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு:

வேட்புமனுக்கள் பரிசீலனையை தொடர்ந்து கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக கொக்கிரகுளம் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.