வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தென்காசி மக்களவைத் தொகுதி: 18 வேட்புமனுக்கள் ஏற்பு

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி உள்பட 18 பேர் வேட்புமனுக்கள் ஏற்பட்டதாக

News image
Updated On :7 ஏப்ரல் 2014, 10:58 am

ஷேக் அப்துல்காதர்

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்திமுருகேசன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி உள்பட 18 பேர் வேட்புமனுக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாற்று வேட்பாளர்களின் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தென்காசி மக்களவைத் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வசந்திமுருகேசன், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் க. கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சி சார்பில் கே. ஜெயக்குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக சார்பில் டாக்டர் சதன்திருமலைக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லிங்கம் மற்றும் சுயேட்சைகள் உள்பட 22 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர்.

திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஷ்வரி முன்னிலையில் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். பரிசீலனையில் பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதிமுகவின் மாற்று வேட்பாளர் மு. பரமசிவன், காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று வேட்பாளர் பொன்னுபாண்டி ஆகிய மூவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 18 மனுக்கள் ஏற்கபட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.