நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் வாபஸ்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது


திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பி. பிரபாகரன் (அதிமுக), சி. தேவதாசசுந்தரம் (திமுக), எஸ்.எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்), எஸ். சிவனணைந்தபெருமாள் (மதிமுக), மை.பா. ஜேசுராஜ் (ஆம் ஆத்மி), வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக் (எஸ்.டி.பி.ஐ) உள்பட 37 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஏே. ஜெபாஸ்டியான்ரகு, ஐ. உஸ்மான்கான், டி. லீதியாள்தேவதாஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...