அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தேசிய ஊரக வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் : மாணிக்கம் தாகூர்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள்கள் என்பதை 150 நாளாக அதிகரிக்கவும், கூலி ரூ.200 ஆக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 12:15 pm

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள்கள் என்பதை 150 நாளாக அதிகரிக்கவும், கூலி ரூ.200 ஆக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே  கிராமங்களில்  பிரசாரம் செய்து மாணிக்கம் தாகூர் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்படும். இது வரையில் நடந்த 15 மக்களவை தேர்தல்களில், 12 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி நடத்தியுள்ளது.

இம்முறை இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடு அமைத்து கொடுக்கப்படும். 60 வயதான முதியோர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் வகையில் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு இதுவரையில் ரூ.589 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது, 100 நாள்களாக உள்ளதை 150 நாள்களாக அதிகரிக்கவும், கூலியாக ரூ.148-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இத்திட்ட வேலையினால் கிராமங்களில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.