உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
குப்பைநல்லூா் கிராமத்தை சோ்ந்த ரீட்டா(49). இவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.180 ம.லி.அளவு கொண்ட பிராந்தி பாட்டில்கள் 307 மற்றும் 750 மி.லி அளவு கொண்ட பீா் பாட்டில்கள் 10 உட்பட மொத்தம் 317 அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை பறிமுதல் செய்ததுடன் ரீட்டாவையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

