பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனி - பொள்ளாச்சி அகல ரயில் பாதை பணிகள் ஆய்வு

பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் தாமதமாவது குறித்து தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 12:14 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் தாமதமாவது குறித்து தென்னக ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சி, பாலக்காடு, போத்தனூர் ரயில்பாதை அகலரயில் பாதையாக மாற்றும் பொருட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பக்தர்கள் என பலரும் மேற்கொண்ட தொடர் போராட்டத்துக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று ரயில் போக்குவரத்து துவங்கியது.

தற்போது பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருச்செந்தூர், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பயணிகள் மற்றும் பக்தர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த வழித்தடங்களால் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. 

இந்நிலையில் பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான வழித்தடத்தில் பணிகள் மிக தாமதமாக நடைபெற்று வரும் நிலையில் இப்பணிகளை விரைவுபடுத்த பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொள்ளாச்சி - போத்தனூர் சேலம் கோட்டத்துக்கும், பொள்ளாச்சி - பாலக்காடு பாலக்காடு கோட்டத்துக்கும், பழனி-பொள்ளாச்சி மதுரை கோட்டத்துக்கும் வரும் நிலையில் பொள்ளாச்சி வரையிலான பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவுபெறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பணிகளை சென்னை தென்னகரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சத்தீஷன் வியாழக்கிழமை டிராலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.  பணிகள் தாமதம் குறித்து கேட்டபோது, பல்வேறு கட்டங்களாக நிதி பெறுதல், பணியாளர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் பணிகள் நிறைவுபெறும் என்றும் தெரிவித்தார்.  மேலும், முதல் கட்டமாக பழனி-பொள்ளாச்சி பணிகள் நிறைவுபெற்ற பின் பாலக்காடு, போத்தனூர் ரயில்பாதை திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.  பழனி வரும் ரயில்கள் நிர்வாக கோளாறு காரணமாக அடிக்கடி தாமதமாவது குறித்து கேட்டபோது பதிலளிக்காமல் சென்று விட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.