பழனி அருகே வங்கி காவலாளியை கொன்று கொள்ளை முயற்சி: 1,500 பவுன் நகைகள் தப்பியது
பழனி அருகே கணக்கன்பட்டியில் பழனி-திண்டுக்கல் பிரதான சாலை அருகே அமைந்துள்ளது டிடி589 கணக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இந்த வங்கியின் காவலராக இருப்பவர் அதே


பழனி அருகே வங்கி காவலாளியை கொலை செய்து கொள்ளையடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் 1,500 பவுன் நகைகள் தப்பியது.
பழனி அருகே கணக்கன்பட்டியில் பழனி-திண்டுக்கல் பிரதான சாலை அருகே அமைந்துள்ளது டிடி589 கணக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இந்த வங்கியின் காவலராக இருப்பவர் அதே ஊரை சேர்ந்த துரைச்சாமி(50). வியாழக்கிழமை இரவு வேலைக்கு சென்ற துரைச்சாமி வீடு திரும்ப நேரமானதால் வெள்ளிக்கிழமை அவரது மகன் சபாபதி வங்கிக்கு சென்று பார்த்த போது மர்மநபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தகவல் ஊருக்குள் பரவி கூட்டம் கூடியது.
சம்பவ இடத்துக்கு பழனி டிஎஸ்பி, சண்முகநாதன் தலைமையில் போலீஸார் வந்து ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளையர்கள் கூட்டாக வந்து துரைச்சாமியை கொன்றுவிட்டு வங்கி கதவை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே அவர்கள் முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். வங்கியில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்காக சுமார் 1,500 பவுன் நகைகள் லாக்கரில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட துரைச்சாமிக்கு மாசிலாமணி என்ற மனைவியும், சபாபதி, பாலாஜி என்ற மகன்களும் உள்ளனர். துரைச்சாமி தந்தை மாரியப்பன் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே வங்கியில் காவலாளியாக இருந்தவர். அவர் பணியில் இருந்த போது இதே போல கொள்ளை முயற்சியின் போது கொலை செய்யப்பட்டதால் துரைச்சாமிக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதே போல இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளதை பலரும் எண்ணி வருத்தப்பட்டனர். இறந்து போன துரைச்சாமி அதே ஊரை சேர்ந்த பிரபலமான சித்தர்சுவாமி ஒருவருக்கு சிஷ்யராக இருந்துள்ளார். அவர் கடந்த மாதம் இறந்துவிட்ட நிலையில் அவர் பெயரில் இருந்த சொத்துக்கள், ரொக்கப்பணம் மற்றும் அறக்கட்டளை தொடர்பான பிரச்னையில் யாரும் இவரை கொலை செய்துவிட்டு பிரச்னையை திசை திருப்பி விட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கு தொடர்பாக ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...