பழனியில் தீ விபத்தில் கணவர் பலி: மனைவி படுகாயம்
பழனி ஆர்.எப்.ரோட்டை சேர்ந்தவர் குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி(55). இவரது மனைவி சுந்தரீஸ்வரி(45). இவர்கள் மகன் தீபக் பிளஸ்டூ படிக்கிறார். கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்


பழனியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்தார்.
பழனி ஆர்.எப்.ரோட்டை சேர்ந்தவர் குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி(55). இவரது மனைவி சுந்தரீஸ்வரி(45). இவர்கள் மகன் தீபக் பிளஸ்டூ படிக்கிறார். கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் பயிற்றுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒருவருடமாக பக்கவாத நோயால் வீட்டிலேயே இருந்துள்ளார். வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது பெட்ரோல் கேனை எடுக்க முயன்றபோது அது அவர் மீது கொட்டியுள்ளது. அதே வேளை அருகே இருந்த விளக்கு தட்டி மேலே விழுந்ததில் உடலில் தீ பரவியது. அப்போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி சுந்தரீஸ்வரியை காப்பாற்ற முயன்றதில் அவரும் பலத்த தீக்காயமடைந்தார். இருவரும் பலத்த தீக்காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் வெள்ளிக்கிழமை கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். சுந்தரீஸ்வரி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சுந்தரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...