வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும்
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியார்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.


நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியார்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில், அமைதலாக, நேர்மையாக, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை தவறாது தபாலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...