பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குடிநீர் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலைமறியல்

பழனியை அடுத்தது சுக்கமநாயக்கன்பட்டி கிராமம்.  இந்த கிராமத்திலும் அருகே உள்ள வினாயகாமில், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த

News image
Updated On :15 ஏப்ரல் 2014, 12:12 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியை அடுத்தது சுக்கமநாயக்கன்பட்டி கிராமம்.  இந்த கிராமத்திலும் அருகே உள்ள வினாயகாமில், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்றாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் கடந்த பல மூன்று மாத காலமாக குடிதண்ணீர் பிரச்னை நீடித்துள்ளது.  ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.250ரூ கொடுத்து கிராமமக்கள் வாங்கி வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை பழனி-கோயமுத்தூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

காலிக்குடங்களுடன் வந்திருந்த பெண்களுடன், ஏராளமான ஆண்களும் மறியலில் பங்கேற்றனர்.  இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.  சாலையின் இருபுறமும் சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கு பேருந்துகள் நின்றன.  மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, கிராமத்தில் குடிநீர் வந்து பலமாதங்கள் ஆகிறது. யாரும் வந்து குறைகளை கேட்பது இல்லை. இதற்கு தீர்வு முடிவாகாமல் நகரமுடியாது என தெரிவித்தனர். 

மறியலில் பங்கேற்ற ஆண்கள் கூறுகையில்,  பல இடங்களிலும் போர்வெல் போட்டு மோட்டார் பொருத்தாமலே அதை மாட்டிவிட்டதாக கூறி அரசியல்வாதிகள் பணத்தை வாங்கிவிட்டனர். இதுமட்டுமல்லாமல் பல்வேறு முறைகேடுகள் ஊராட்சியில் நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர்.  மறியல் குறித்து அறிந்த பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, டிஎஸ்பி., சண்முகசுந்தரம், ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்படும் என உத்திரவாதம் அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.