ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காசோலை மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற காமராஜர் பல்கலைக்கழக ஊழியருக்கு ஒராண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 12:30 pm

கோ.ஜெயக்குமார்

காசோலை மோசடி வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கண்காணிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லியைச் சேர்ந்தவர் ஜோதிமுருகன் (43). இவரிடம் மதுரை, கோரிப்பாளையம், சின்ன கண்மாய் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (63) என்பவர் 20.10.2007-ம் தேதி ரூ.4.50 லட்சம் கடனாக பெற்றுள்ளார். சக்திவேல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

பணத்தை ஜோதி முருகன் திரும்பக் கேட்ட போது, சக்திவேல் அதற்காக 12.2.08-ம் தேதியிட்ட பாரத ஸ்டேட் வங்கி காசோலையைக் கொடுத்துள்ளார். இதை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு வங்கியில் ஜோதிமுருகன் செலுத்தியுள்ளார். சக்திவேல் கணக்கில் போதிய பணம் இல்லாததால், காசோலை திரும்பியுள்ளது.

இதனையடுத்து ஜோதிமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் தனி நபர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கே.மாரியப்பன், சக்திவேலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.