ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேர்தல் விதி மீறல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு

தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 12:17 pm

கோ.ஜெயக்குமார்

தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் பஸ் நிறுத்தத்தில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் செவ்வாய்கிழமை இரவு 10.20 மணியளவில், தேர்தல் விதி முறைகதளுக்கு முரணாக மூன்று வாகனங்களுக்கு மேல் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதனை அங்கிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் அலுவலக கண்காணிப்பாளரும், சட்ட மன்றத் தொகுதி நிர்வாக நடுவருமான நமச்சிவாயம் (45) இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதனையும் மீறி அவர்கள் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் நமச்சிவாயம் புதன்கிழமை புகார் செய்தார். போலீஸார் கிருஷ்ணசாமி, தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகர்மன்ற கவுன்சிலர்கள் தங்கமாங்கனி, செல்வமணி, அய்யாவுப்பாண்டியன் மற்றும் ஜான்ராஜ் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.