விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்தினவேலை ஆதரித்து எம்.பி.கனிமொழி வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரம் செய்கிறார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆகியோர் கிராமங்கள் தோறும் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் எம்.பி.கனிமொழி பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் குறிப்பிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 4 மணிக்கு சாத்தூரில் முக்ராந்தல், 5.30 மணி முதல் 6.30 மணி வரையில் சிவகாசியில் பைபாஸ் சாலை, டெக்ஸ்டைல்ஸ், பராசக்தி காலனி, இரவு 7 மணி முதல் 7.30 மணி வரையில் திருத்தங்கல் பள்ளப்பட்டி சாலை, சத்யா நகர், தேவர்சிலை ஆகிய பகுதியிலும், இரவு 8 மணிக்கு விருதுநகர் நகராட்சி சாலையிலும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து வாக்குகள் சேகரிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை தொகுதி தலைவருமான முத்தையா, மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


