விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை கணினி மூலம் ஒருங்கிணைந்த முறையில் தேர்வு செய்யும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்கு பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை கணினி மூலம் ஒருங்கிணைந்த முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மக்களவை தொகுதி மேற்பார்வையாளர் அனில்குமார் கலந்து கொண்டு பேசுகையில், வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இந்திரங்கள் தேர்வு செய்யும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது. உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் கேட்டு அறிந்து கொள்ளலாம். யாரவது ஒருவர் வாக்குச் சாவடி மையத்தின் எண்ணை குறிப்பிடலாம். அங்கு எந்த எண் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட இருப்பதை தெரிந்து கொள்ள முடியும் என தொகுதி மேற்பார்வையாளர் அனில்குமார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் 7 சட்டப்பேரவை தொகுதியிலும் உள்ள 1711 வாக்குச் சாவடி மையங்களிலும் 1796 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3592 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்துவதற்கு கணினி மூலம் ஒருங்கிணைந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்தெந்த வாக்கு சாவடிக்கு எந்த எண் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்கிற விவரம் குறுந்தகடு மூலம் பதிவு செய்து வழங்கப்படும். அதை பார்த்து ஒவ்வொரு வேட்பாளர்களின் முகவர்களும் சரிபார்த்துக் கொள்ளலாம் என விவரமாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் உதயகுமார்(அருப்புக்கோட்டை), மணிவண்ணன்(சிவகாசி), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பவானிஜீஜா, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

