ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்ரீவிலி. நகராட்சிக்கு 3 ஆண்டுகளில் 10.50 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: நகர்மன்றத் தலைவி பெருமிதம்

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வரும் ஜெ.ஜெயலலிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு அனைத்து மக்களும்

News image
Updated On :19 ஏப்ரல் 2014, 11:43 am

கோ.ஜெயக்குமார்

தமிழக முதல்வராக மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வரும் ஜெ.ஜெயலலிதா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ரூ.10.50 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்று நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி கூறினார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வசந்தி முருகேசனை ஆதரித்து சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் அ.தி.மு.க. செயலாளர் வி.டி.முத்துராஜ் மற்றும் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் கட்சித் தொண்டர்களுடன் பல்வேறு இடங்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்கி சேகரித்தனர்.

அப்போது நகர்மன்றத் தலைவி செந்தில்குமாரி கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதி. மழை தொடர்ந்து இப் பகுதியில் பொய்த்துப் போனதால், மக்கள் பல்வேறு வேலைகளுக்காக சிவகாசி, ராஜபாளையத்திற்கு நாள்தோறும் சென்று வரும் நிலையுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தின் மந்திரிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகால முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் சாலை, கழிவு நீர் பாதை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்காக ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நகர் மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் அனைத்து வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு மத்திய அரசு அமையும் போது, தமிழர்கள் தலை நிமிர்ந்து உலக அளவில் நிற்க இயலும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.கே.மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பை தமிழர்களுக்காக வாழ்வதாகக் கூறிக்கொள்ளும் கருணாநிதி கெடுத்தார். கருணாநிதி தனது குடும்பம், தனது சுயநலத்திற்காக செல்வம் கொழிக்கும் மத்திய மந்திரி பதவிகளை பெறுவதில் தான் அக்கறை காட்டினார்.

 ஆனால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு குடும்பமே தமிழக மக்கள்தான். நம் நலனில் அக்கறையுள்ள, தமிழர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள முதல்வரின் கரத்தை வலுப்படுத்தவும், மத்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் நம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டு நம் பகுதி மேலும் உயர்வு பெறவும் அ.தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழக முதல்வரால், தமிகத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களும் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது. சென்ற பகுதிகளில் எல்லாம் நகர்மன்றத் தலைவிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.