வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை அருகே வாகனச் சோதனையில் 30 கிலோ தங்கம் சிக்கியது

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை இரவு மேற்கொண்ட வாகனச் சோதனையில் 30 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கியது. இது குறித்து தேர்தல் பார்வையாளர்கள், வருமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :19 ஏப்ரல் 2014, 4:40 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை இரவு மேற்கொண்ட வாகனச் சோதனையில் 30 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கியது. இது குறித்து தேர்தல் பார்வையாளர்கள், வருமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி சோதனைச்சாவடிகள் அமைத்து போலீஸார், தேர்தல் பறக்கும்படை, தேர்தல் பார்வையாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். தேர்தலுக்கு ஒரு சில தினங்கள் உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. சனிக்கிழமை இரவு கூடுதல் எஸ்.பி. அருண்சக்திகுமார், டி.எஸ்.பி. மலைச்சாமி, காவல் ஆய்வாளர் செ. பிரதாபன், உதவி ஆய்வாளர் தனலெட்சுமி உள்ளிட்டோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வாகனத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து நாகர்கோவிலில் உள்ள அந்நிறுவனத்தின் மற்றொரு கடைக்கு 30 கிலோ தங்கக்கட்டிகள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 8.40 கோடி ஆகும்.

தகவலறிந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி பிரேமா தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். நகைக்கடை விற்பனையாளர் வேல்முருகன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கக்கட்டிகளை கொண்டு சென்றனர்.

இதையடுத்து தங்கக்கட்டிகள் வந்த வாகனம் திருநெல்வேலி நகரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், வருமானத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.