ஸ்ரீவில்லிபுத்தூர், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் ராஜலட்சுமி (24). பட்டதாரி ஆசிரியையான இவர் என்.ஜி.ஓ.ஓ. காலனியில் உள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். திங்கள்கிழமை இவரது தந்தைக்கு உடல் சரியில்லாததால், இவரது சகோதரி அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் ராஜலட்சுமி வேலை செய்யும் பள்ளிக்கு பகல் 2.30 மணியளவில் இருவரும் வந்துள்ளனர். பள்ளிக்கூடம் முடிந்துவிட்டதால் மூவரும் சேர்ந்து நடந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். லயன்ஸ் பள்ளிக்கும் தியாகராஜா பள்ளிக்கும் இடையே மூவரும் ஜன நெருக்கடி மிகுந்த பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளார். பின்னால் கைலி அணிந்து வந்த இளைஞர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னறை பவுன் தங்க நகையை பறித்துள்ளார். இதனைத் தடுக்க வந்த அவரது தந்தையை அந்த நபர் தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்த அவர் காயம் அடைந்தார். ராஜலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது.