ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ஞானதேசிகன் அறிக்கை
நாளை மறுநாள் இந்ததேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் நாள். பத்தாண்டு கால வளர்ச்சி, தகவல் பெறுகிற உரிமை, இலவச கட்டாய கல்விக்கான உரிமை, உணவுக்கான


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:
நாளை மறுநாள் இந்ததேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் நாள். பத்தாண்டு கால வளர்ச்சி, தகவல் பெறுகிற உரிமை, இலவச கட்டாய கல்விக்கான உரிமை, உணவுக்கான உத்திரவாதம் தருகிற உரிமை, லஞ்சத்தை நீக்குவதற்கு லோக்பால் சட்டம் என்று உரிமைகளை கொடுத்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் தொடர உங்களை நாடிநிற்கிறோம்.
பத்தாண்டுக்கு முன்பு 5.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக சராசரி வளர்ச்சி பெற்றிருக்கிறது. 51,511கி.மீட்டராக இருந்த கிராமச் சாலைகளை 3,81,000 கி.மீட்டராக உயர்த்திகாட்டியிருக்கிறோம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு 7,248 கோடிதான் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது இன்று மத்தியஅரசால் 36,322 கோடி செலவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்குமுன்பு 9,71, 182 சுயஉதவிக்குழுக்கள் இருந்தன. இன்று வங்கிகளோடு தொடர்புடைய 41,16,000 பெண்கள் சுயஉதவிக்குழு உருவாகியிருக்கிறது.
பத்தாண்டுக்கு முன்பு 14,15,000 தான் சிறுபான்மையினரின்வங்கிகணக்கு 4,000 கோடிதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடனுதவி இன்று 121மாவட்டங்களில் 43, 52,000 வங்கி கணக்கு 66,500 கோடிரூபாய் கடனுதவி. பத்தாண்டுக்கு முன்புகல்விக்காக செலவிடப்பட்டது 10,145 கோடிதான். இனறு; காங்கிரஸ் அரசு கல்விக்காக செலவழிப்பது79,451 கோடி ரூபாய்.
காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுகாதாரத்திற்கான உரிமையை,ஓய்வூதியயத்திற்கான உரிமையை, குடியிருக்க சொந்த வீட்டிற்காக உரிமையை, சமூக பாதுகாப்பிற்கான உரிமையை தருவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றோம்.
வளர்ச்சிப்பாதையில் 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வழிகாட்டுதலில் மன்மோகன்சிங் அரசு செயல்பட்டது. இந்தவளர்ச்சி வருகிற 5 ஆண்டுகளும் தொடரவேண்டும்.
தமிழகத்தில் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற திராவிட இயக்கங்களால் இது முடியாது. வெற்றிபெற்றால் யார் பிரதமர் என்று சொல்லத் தெரியாத கட்சிகள் தமிழகத்தில் வாக்கு சேகரிக்கின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியும்.தனிமனித விமர்சனங்களுமே இவர்களுடைய கொள்கை.
எந்தவித பொருளாதார திட்டமோ, தொலைநோககு; பார்வையோ இந்த இயக்கங்களுக்கு கிடையாது.நடக்க இருக்கின்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே நடக்கின்றதேர்தல் அல்ல.இந்திய ஜனநாயக வரலாற்றில் கட்சிகளுக்குள்ளேதான் தேர்தலுக்கு போட்டியிருக்கும். ஆனால் விசித்திரமாக,வினோதமாக இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், நரேந்திரமோடிக்குமான தேர்தலாகமாறியிருக்கிறது.
பாரதீய ஜனதா என்ற கட்சி மறைக்கப்பட்டு குஜராத்தில் இரத்தக் களரிக்கு வழிவகுத்த நரேந்திரமோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார். வளர்ச்சிக்கும்,அழிவிற்குமான தேர்தல், இது மதச்சார்பற்ற தன்மைக்கும், மதவாதத்திற்கும் நடைபெறும் தேர்தல்,ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்.
மக்களே! காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் வாக்குகளை கை சின்னத்தில் வாக்களித்து உறுதியான ஒருஅரசை மத்தியில் அமைப்பதற்கு உதவ வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...