தேர்தலுக்கு பிறகு தமிழகம் இருளில் மூழ்கும் அவலம் ஏற்படும் என்று செவ்வாய்க்கிழமை ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சராம் செய்த தஞ்சை மக்களவை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
ஒர்ததநாட்டில் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தஞ்சை மக்களவை பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பேசுகையில் தமிழக மக்கள் மத்தியில் மோடி பிரதமராக வரவேண்டும் என் நீண்ட எதிர்பார்ப்புடன் இóருக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. தேர்தலுக்கு பிறகு தமிழகமே இருளில் மூழ்கும் அவல நிலையில் உள்ளது.
அதேப்போல் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு இப்பகுதிக்கு ஒரு தொழிற்சாலை கொண்டுவந்திருக்கலாம் அதற்கு பதிலாக இப்பகுதியில் சாராய தொழிற்சாலை கொண்டு வந்தார். மீத்தேன் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த டி.ஆர்.பாலு இலங்கை பிரச்சனை, மீனவர் பிரச்சனைக்களுக்கு தீர்வுகாண முன்வரவில்லை.
நான் கடந்த 20 ஆண்டு காலமாக அரசியல் பொது வாழ்வில் ஈடுப்ட்டு வருகின்றேன். இப்பகுதிக்கு நல்ல பல திட்டங்கள் வர நான் கொண்டு வரவேன், மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய தஞ்சை மக்களவை தேர்தலில் போட்டியிடும் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்யுங்கள் என்றார். பிரச்சாரத்தில் பாஜக முன்னால் மாவட்ட தலைவர் கர்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம்: சாதனைப் படைத்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

ஏப்ரல் மாதம் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் குலைந்தது ஏன்? - ப. சிதம்பரம்

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

13 நாள்களாகியும் பதிலளிக்காத மோடி, அமித் ஷா: ராகுல் காந்தி
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK


