நடிகை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம்: ஆதித்யா சோப்வை மணந்தார்
ஹேராம் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்தவர் ராணி முகர்ஜிக்கு அவரது காதலர் ஆதித்ய சோப்ராவுக்கும் நேற்று இத்தாலியில் ரகசிய திருமணம் நடந்தது,. பாலிவுட்டில்


ஹேராம் படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்தவர் ராணி முகர்ஜிக்கு அவரது காதலர் ஆதித்ய சோப்ராவுக்கும் நேற்று இத்தாலியில் ரகசிய திருமணம் நடந்தது,. பாலிவுட்டில் பிரபல நடிகையான ராணி முகர்ஜி, பாலிவுடை 11 வருடங்கள் ஓடிய தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ராவை காதலித்து வந்தார்.
ஆதித்யா சோப்ரா மறைந்த இயக்குனர் யஷ் சோப்ராவின் மகன் ஆவர். அவர் ஏற்கனேவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பாலிவுட்டில் கிகிகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தாலி சென்ற ஆதித்ய சோப்ரா, ராணி முகர்ஜி ஜோடி ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து பாலிவுட் திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், நேற்று (ஏப்ரல் 21) இரவு ஆதித்ய சோப்ராவுக்கும், ராணி முகர்ஜிக்கும் ரகசிய திருமணம் எளிமையான முறையில் நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...