ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் கைது: ரூ.1.66 பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் இரண்டு பேர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1,66,400 பறிமுதல்

News image
Updated On :22 ஏப்ரல் 2014, 8:32 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் இரண்டு பேர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1,66,400 பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்கிழமை வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புடன் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படை அலுவலர் பாபுசந்திரபிரகாஷிற்கு தகவல் வந்தது. இதன் பேரில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற போது அங்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சிலர் ஓடிவிட்டனர். படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் சிவசுப்பிரமணியன் (படம்) என்பவரை பறக்கும் படையினர் கைது செய்து வன்னியம்பட்டி காவல் நிலையம் கொண்டு வந்தனர். இவரிடம் இருந்த பணம் ரூ.1,60,200 பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சனிக்கிழமை வடக்கு ரதவீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புதிய தமிழகம் கட்சியின் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பறக்கும் படைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அலுவலர் பாபு சந்திரபிகாஷ், அங்கு பணம் கொடுத்து கொண்டிருந்த அ.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினரின் தம்பி ஸ்ரீதர் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்த பணம் ரூ.6,200-யை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.