கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 80.15 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்களில், 10 லட்சத்து 67 பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்கலை காட்டிலும் வாக்குப்பதிவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடலூல் நாடாளுமன்ற தொகுதியில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எ.அருண்மொழிதேவன், திமுக சார்பில் கொ.நந்தகோபாலகிருஷ்ணன், தேமுதிக சார்பில் சி.ஆர். ஜெயசங்கர், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கு.பாலசுப்பிரமணியன், உள்பட 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,408 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 17 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 2,816 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
பல இடங்களில் காலை 7 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 15 சதவீதம், 11 மணிக்கு 36 சதவீதம், 1 மணிக்கு 48 சதவீதம், 3 மணிக்கு 65 சதவீதம், 5 மணிக்கு 72 சதவீதம் வாக்குகள், 6 மணி இறுதி நிலவரப்படி 80.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.
திட்டக்குடி சட்ட மன்ற தொகுதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 878, விருத்தாசலம் தொகுதியில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 341, நெய்வேலி தொகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 410, பண்ருட்டி தொகுதியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 620, கடலூர் தொகுதியில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 941, குறிஞ்சிப்பாடி தொகுதியி்ல்1 லட்சத்து 79 ஆயிரத்து 577 வாக்குகள் என மொத்தம் 10 லட்சத்து 67 வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு சதவீதம் 80.15.
இருப்பினும் முழுமையான இறுதி விவரம் வெள்ளிக்கிழமை தான் தெரியவரும் மாவட்ட தேர்தல் அதிகாரி ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

