தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பார்வையற்றவர் விரும்பிய வாக்குப் பதிலாக வேறு வாக்கினைப் பதிவு செய்த வாக்குச் சாவடி அலுவலர் மாற்றம்

நாகை மாவட்டம், சீர்காழி, கோவில்பத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியின் வாக்குச் சாவடி அலுவலர், கண் பார்வையற்றவர்கள் மற்றும் முதியவர்கள் விருப்பம் தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களிக்காமல், மாற்று சின்னத்துக்கு வாக்களிப்பதாக வியாழக்கிழமை காலை  சர்ச்சை ஏற்பட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 4:08 pm

சங்கர்

நாகை மாவட்டம், சீர்காழி, கோவில்பத்து நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியின் வாக்குச் சாவடி அலுவலர், கண் பார்வையற்றவர்கள் மற்றும் முதியவர்கள் விருப்பம் தெரிவிக்கும் சின்னத்தில் வாக்களிக்காமல், மாற்று சின்னத்துக்கு வாக்களிப்பதாக வியாழக்கிழமை காலை  சர்ச்சை ஏற்பட்டது.

இந்த நிலையில்,  மனிதநேய மக்கள் கட்சியினரின் ஏற்பாட்டில்,  மன்சூர்அலி(51)என்பவர் (கண்பார்வைக் கொண்டவர்)  தனக்குக் கண்பார்வை சரியில்லை எனக் கூறி, வாக்குச் சாவடி அலுவலர் ராஜேந்திரனை அணுகி தான் வாக்களிக்க விரும்பும் சின்னத்தைத் தெரிவித்துள்ளார்.

அப்போது, மன்சூர்அலி குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக்காமல், வாக்குச் சாவடி அலுவலர் ராஜேந்திரன் வேறொரு சின்னத்தில் வாக்கைப் பதிவு செய்தாராம். அப்போது, மன்சூர்அலி வாக்குச் சாவடி அலுவலர் தனது வாக்கை மாற்றிப் பதிவு செய்ததை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால், அந்த வாக்குச் சாவடியிலிருந்த அரசியல் கட்சி முகவர்களுக்கும், வாக்குச் சாவடி அலுவலர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துத் தகவலறிந்த தேர்தல் பணி அலுவலர்கள், ராஜேந்திரனை அந்த வாக்குச் சாவடி பணியிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக எழிலரசன் என்பவரை வாக்குச் சாவடியில் பணியமர்த்தினர். அதன் பின்னர், அங்கு அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.