மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் பான்பரி மார்க்கெட் கடைகளுக்குள் புகுந்த சாக்கடை கழிவு நீர்: வியாபாரிகள் அவதி

கடலூர் பான்பரி மார்கெட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை, வாழைப் பழங்கள், பூ விற்பனை, மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளும் இங்கு உள்ளன.மார்க்கெட் பகுதியில்

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 2:44 pm

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்கெட் கடைகளுக்குள், வெள்ளிக்கிழமை திடீரென சாக்கடை நீர் புகுந்தது.  10 கடைகளுக்குள் சாக்கடை நீர் புகுந்ததால் கடையில் இருந்த பொருள்கள் சேதம் அடைந்தன.

கடலூர் பான்பரி மார்கெட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை, வாழைப் பழங்கள், பூ விற்பனை, மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளும் இங்கு உள்ளன.மார்க்கெட் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர், தனி வாய்க்கால் வழியாக, ரயில்வே தண்டவாளங்களுக்கு கீழ் உள்ள பாலம் வழியாக, பிரதான வடிகாலுடன் இணைக்கப்பட்டு இருந்தது.ஆனால் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தப் பாலம் வேறு இடத்தில் கட்டப்பட்டு விட்டதாகவும், இதனால் பான்பரி மார்க்கெட் பகுதியில் உள்ள கழவுநீர் பிரதான வாய்க்காலுக்குச் செல்ல முடியாமல், தடைபட்டுவிட்டதாக பான்பரி மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அடிக்கடி இந்த மார்க்கெட்டில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி, அங்குள்ள  கடைகளுக்குள் புகுந்து விடும் அவலம் நிலவுகிறது. மார்கெட்டின் பிரதான நுழைவாயில் பகுதியில் 2 அடி உயரத்துக்கு சாக்கடை நீர் தேங்கி, பொதுமக்கள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டதுடன், 10  கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்து விட்டது. இதனால் கடைகளில் இருந்த அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்கள் சேதம் அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த மார்க்கெட்டின் அருகில் குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இத்தொட்டி நிரம்பி வழியும் போதும், சுத்தம் செய்யும்போது வெளியேற்றப்படும் கழிவு நீரும் பான்பரி மார்க்கெட், கழிவுநீர் வாய்க்காலுடன் சேர்ந்து, பாதிப்பை அதிகரிப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.