பழனி ரோப்கார் பராமரிப்பு முடிந்து இன்று முதல் இயக்கம்
பழனி மலைக்கோயில் ரோப்கார் கடந்த 2004ம் ஆண்டு பக்தர்களுக்காக நிறுவப்பட்டது. பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ரோப்கார் தினமும் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒருநாளும், வருடத்தில் ஒருமாதமும்


பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.
பழனி மலைக்கோயில் ரோப்கார் கடந்த 2004ம் ஆண்டு பக்தர்களுக்காக நிறுவப்பட்டது. பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ரோப்கார் தினமும் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒருநாளும், வருடத்தில் ஒருமாதமும் பராமரிப்புக்காக நிறுத்தப்படுகிறது. தற்போது கோடைவிடுமுறை துவங்கியுள்ள நிலையில் பழனிக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த ஏப்.23ம் தேதி ரோப்கார் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு மூன்று நாட்கள் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூன்மாதம் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. ரோப்கார் பெட்டிகளின் ரப்பர் புஷ்கள், உயர்கோபுரத்தில் உள்ள பேரிங்குகள், கீழ் மற்றும் மேல்தளத்தில் உள்ள அச்சுக்களின் உராய்வு தன்மை, வடக்கயிறின் திறன் உள்ளிட்ட பல்வேறு சோதனை கடந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை பணிகள் நிறைவுபெற்ற நிலையில் மாதிரி எடைகள் வைத்து அதிகாரிகளால் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது. பணிகள் திருப்திகரமாக இருந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை ரோப்கார் பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, உதவி செயற்பொறியாளர் நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...