கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாணவிகளுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு நாள் விழா

விருதுநகர் மாவட்ட அனைத்து வாலிபால் கிளப் அசோஸியேசன் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஏப்ரல் 2014, 5:48 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்ட அனைத்து வாலிபால் கிளப் அசோஸியேசன் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சியை ஒருங்கிணைப்புச் செயலாளர் பேராசிரியர் எம்.பி.செல்வகணேஷ், மாவட்ட வாலிபால் சங்கத்தின் தலைமையிட செயலாளர் டி.பொன்னியின் செல்வன் ஆகியோர் தலைமையில் உடற்கல்வி இயக்குநர்கள் அளித்தனர்.

பயிற்சி நிறைவு நாள் விழா விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி அவர் பேசுகையில் கூறியதாவது:

கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
வாலிபால் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு வாலிபால் இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப் பட்டது. விளையாட்டுகள் மாணவர்களிடம் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக அமைகிறது என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மதுரை, சிவில் சப்ளைஸ் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி.சாமிநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.ராமசுப்பிரமணியராஜா, மதுரை தொழிலதிபர் கே.கோவிந்தசாமி, எஸ்.அம்மாபட்டி ஊராட்சி மன்றத் தலைவி பி.விஜயலட்சுமி, மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் ஏ.சி.ஆர்.டி.ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு் வாழ்த்துரை வழங்கினர். தலைமை ஆசிரியை சி.உமா தேவி நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.