/

அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் சென்றடையவில்லை: பாஜக புகார்

தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இதுவரை சென்றடையவில்லை என கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

News image
Updated On :29 ஏப்ரல் 2014, 11:33 am

ஜி.சுந்தரராஜன்

தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இதுவரை சென்றடையவில்லை என கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு புகார் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிடத்தில் சிதம்பரம் மக்களவை தனித் தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த தபால் வாக்குகளை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு இதுவரை தபால் வாக்குகள் சென்றடையவில்லை என எங்களது கட்சிக்கு புகார் வந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.