ஆம்பூரில் முதல் மனைவியை அடுத்து துன்புறுத்திய கணவர் மற்றும் அவருடைய 2-வது மனைவியை ஆம்பூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரபீக் (32). இவருக்கு திருமணமாகி குல்ஷான் (30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிலோபர் (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டாராம். அதனை குல்ஷான் தட்டிக் கேட்டாராம். அதனால் ஆத்திரமடைந்த ரபீக் மற்றும் நிலோபர் ஆகிய இருவரும் சேர்ந்து குல்ஷானை அடித்து துன்புறுத்தியுள்ளனர். புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரபீக், குல்ஷான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.