தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்க கோரி கிராம நிர்வாக அலுலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழனி தாலுகா அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம ஊழியர் சங்க வட்டார தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மைக்கேல்


பழனியில் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனி தாலுகா அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம ஊழியர் சங்க வட்டார தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மைக்கேல் வரவேற்புரை வழங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட செயலாளர் சந்திரசேகரன், வட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு கிராம ஊழியர் சங்க மாநில பொருளாளர் மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் வாக்குச்சாவடிக்கான ஏற்பாடுகள் செய்தல், மின்னணு பெட்டிகளை கொண்டு போய் சேர்த்தல், வாக்காளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்காக ரூ.600 வீதம் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கூடுதலான பணிகள் செய்தும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்களுக்கு எந்த தொகையும் வழங்கப்படவில்லை. ஆகவே, தேர்தல் ஆணையம் எங்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...