தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை வீரபாண்டி கௌமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.சோமுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீரபாண்டி கெüமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்கள் மற்றும் கேரளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசித்துச் செல்வர்.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதி, மின்வசதி, தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி செய்து தருவது குறித்து இந்து அறநிலையத்துறை, வருவாய் துறை, காவல் துறை, பொதுப்பணி துறை, சுகாதாரத் துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொது சுகாதார துணை இயக்குநர் காஞ்சனா, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர்(கட்டடம்) ராமநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, கோயில் செயல் அலுவலர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!
கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் பட புரோமோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

