கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் 2 பேர் மணல் லாரியின் சக்கரத்தில் சிக்கி இறந்தனர்.
கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரைச்சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் சதீஷ்(18) ப்ளஸ் 1 மாணவர், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் டில்லிபாபு (18) ஐடிஐ மாணவர் இருவரும் சனிக்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக பக்கத்தில் உள்ள கண்டிகைக்கு சென்று விட்டு வேங்கடமங்கலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் சென்ற மணல் லாரியை முந்திய போது லாரியின் மீது மோதியதில் லாரி டயரில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்த மாணவர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

