பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே கார் - லாரி மோதல்: 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2014, 9:48 am

குமார முருகன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.

கீழக்கரையைச் சேர்ந்தவர் அலி இப்ராஹிம். இவர் தன் மனைவி ஷாகுல் உமாவுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது ஒரு பெண் கீழக்கரையில் உள்ளார். இன்னொரு பெண் ஈரோட்டில் உள்ளார். இரு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காரில் குற்றாலம் நோக்கிச் சென்றார் அலி இப்ராஹிம்.

இவர்கள் ஒரு காரில் ஈரோட்டில் இருந்து குற்றாலம் நோக்கிச் சென்றனர். தென்காசியில் இருந்து மதுரை நோக்கி ஒரு லாரி சென்றது. முன்னால் சென்ற ஒரு ஸ்விப்ட் காரை இவர்கள் சென்ற கார் முந்திச் செல்ல முயன்றபோது, லாரியுடன் மோதியது. இதில் இரு கார்களுமே விபத்தில் சிக்கின. முந்திச் செல்ல முயன்ற காரில் இருந்த அலி இப்ராஹிம், அவர் மனைவி ஷாகுல் உமா, ஜஸ்ரத் நிஷா, முஷ்டாக்  என 2 பெண் குழந்தைகள் ஆகிய நால்வரும் இந்த விபத்தில் பலியாயினர். மேலும் இரு பெண்கள், 5 வயதுச் சிறுவன் என மூவர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.