பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கம்பத்தில் குடும்ப தகராறு: பூச்சிகொல்லி மருந்து அருந்தி தாய் மூன்று மகள்களுடன் தற்கொலை

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேஸ்கண்ணன்(32). புண்ணாக்கு மில்லில் வேலை செய்து வருகிறார்.  ராஜேஸ்கண்ணனும், கேகிலாபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி(29)

News image
Updated On :14 ஆகஸ்ட் 2014, 12:13 pm

அறிவழகன்

கம்பத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று மகள்களுக்கும் பூச்சிகொல்லி மருந்து கொடுத்து, தாயும் தற்கொலை செய்து கொண்டார். இதில் மூன்று மகள்களும் பரிதபாமாக வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜேஸ்கண்ணன்(32). புண்ணாக்கு மில்லில் வேலை செய்து வருகிறார்.  ராஜேஸ்கண்ணனும், கேகிலாபுரத்தைச் சேர்ந்த பத்மாவதி(29) வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்களின் எதிர்த்து, காதல் திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 5-ம் வகுப்பு படிக்கும் கார்த்திகா(11), 4-ம் வகுப்பு படிக்கும் நாகஜோதி(9), 3-ம் வகுப்பு படிக்கும் கோகிலப்பிரியா(7) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை வழக்கம் போல் ராஜேஸ்கண்ணன் வேலைக்கு சென்று விட பத்மாவதி, தனது மூன்று மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார்.  காலை 11 மணியளவில் மனமுடைந்து பத்மாவதி தனது மூன்று மகள்களுக்கும் பூச்சிகொல்லி மருந்தை கொடுத்து, தானும் குடித்துள்ளார். இதில் 4 பேரும் மயக்கம் அடைந்த நிலையில், சிறிது நேரம் கழித்து கார்த்திகா மட்டும் வீட்டிற்கு வெளியே வந்து,  பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் பூச்சி கொல்லி மருந்து குடித்ததை கூறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 4 பேரையும் உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பத்மாவதி, கார்த்திகா, நாகஜோதி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கோகிலாப்பிரியாவுக்க மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த நிலையில் 2 மணி நேரத்திற்கு பின்னர், கோகிலப்பிரியாவும் பரிதாபமாக உயிரிழந்தார். தாயும், 3 பெண் குழந்தைகளுக்கும் பூச்சி கொல்லி மருந்து கொடுத்து தானும் தற்கொலை செய்த துயர சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பம் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து, கணவர் ராஜேஸ்கண்ணனை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.