மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லையில் மதுக்கூடங்களில் திடீர் சோதனை: 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :18 ஆகஸ்ட் 2014, 3:16 pm

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்துச் சென்று பொருள்களை வாங்கத் தொடங்கினர். ஆனால், அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி சாதாரண கூட்டத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் (பொ) பூ.ஜெகநாதன் என்ற கணேசன் பதிலளிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து ஏற்கெனவே உள்ள பிளாஸ்டிக் பொருள்களை 18 ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை, உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் பாலகணேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் சாகுல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உடன்சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநராட்சி அலுவலர்கள் 3 குழுக்களாக திங்கள்கிழமை பிரிந்து சென்று 11 டாஸ்மாக் மதுக்கூடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 750 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும். 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ளவையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிப்பெற்றே விற்பனை செய்ய வேண்டும். 

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் அடுத்தக்கட்டமாக அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோருக்கு ரூ.100-ம், விற்பனையாளருக்கு ரூ.500-ம், உற்பத்தியாளருக்கு ரூ.1000-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.