ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஒண்டிவீரன் சிலை அமைக்க வலியுறுத்தி நெல்லையில் ஆதிதமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் சிலை அமைக்க வேண்டும் என வலியுறத்தி புதன்கிழமை ஆதிதமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 9:31 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் சிலை அமைக்க வேண்டும் என வலியுறத்தி புதன்கிழமை ஆதிதமிழர் பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாளையங்கோட்டையில் கட்டப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நேர்த்தியான சிலை அமைத்து மணிமண்டபத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆதிதமிழர் பேரவை சார்பில் பாளை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில இளந்தமிழர் பேரவை செயலர் மு. கதிரவன், மாநில கொள்கைபரப்புச் செயலர் சு.க. சங்கர், மாநில துணைப்பொதுச்செயலர் க. கண்ணன் தலைமை வகித்தார். கோரிக்கையினை வலியுறுத்தி அமைப்பின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் போஸ், செயலர் குமரேசன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ரா.வே. மனோகர், செயலர் சண்முகவேல், நெல்லை மாவட்டத் தலைவர் க.ந. சுந்தரராஜ், செயலர் கு.கி. கலைக்கண்ணன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.