தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நீர்திறப்பு: கல்லணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து, வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக வெள்ளிக்கிழமை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லணையிலிருந்து கீழணைக்கு கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும் என கடலூர் மாவட்ட

News image
Updated On :22 ஆகஸ்ட் 2014, 10:44 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே அணைக்கரையில் உள்ள கீழணையிலிருந்து, வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக வெள்ளிக்கிழமை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கல்லணையிலிருந்து கீழணைக்கு கூடுதலாக நீர் திறந்துவிட வேண்டும் என கடலூர் மாவட்ட காவிரி டெல்டா கடை, மடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரையில் கீழணை உள்ளது. கடந்த ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து விநாடிக்கு 1002 கனஅடி திறந்து விடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கீழணைக்கு வியாழக்கிழமை வந்து சேர்ந்தது. கீழணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். தற்போது 4.50 அடி நீர் உள்ளது.

கீழணை மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாறு மூலம் 11,852 ஏக்கர் நிலங்களும், வீராணம் ஏரி மூலம் 49,440 ஏக்கர் நிலங்களும், கான்சாகிப் வாய்க்கால் மூலம் 9,9993 ஏக்கர் நிலங்களும், வடக்குராஜன் வாய்க்கால் மூலம் 29,835 ஏக்கர் நிலங்களும், மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் மூலம் 22,408 ஏக்கர் நிலங்களும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள குமிக்கி மண்ணியார் வாய்க்கால் மூலம் 1581 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் சென்னை குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை குடிநீர் வாரியத்திற்கு வீராணம் ஏரியிலிருந்து நீர் அனுப்புதவதற்கு ஏதுவாக கீழணையிலிருந்து, வடவாறு வழியாக விநாடிக்கு 248 கனஅடி நீர் வீராணம்ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலை திறந்துவிடப்பட்டது. திறந்துவிடப்பட்ட நீர் காட்டுமன்னார்கோயில் அருகே ருத்ரசோலை மதகு வழியாக வீராணம்ஏரிக்கு வந்தடைந்தது. வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது ஏரியில் 41.45 அடிநீர் உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு விநாடிக்கு 70 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லணையிலிருந்து கூடுதலாக நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை: வீராணம்ஏரிக்கு நீர் திறந்து விடப்பட்டது மகிழ்ச்சியான செய்திதான். தற்போது நீர் திறந்துவிடுவது குறித்து விவசாயிகள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஏனென்றால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். மழை நம்பி இந்த நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆக.25-ம் தேதி முதல் செப் முதல் வாரத்தில் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல்விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அப்போதுதான் நீர் தேவைப்படும். மேலும் மேட்டூரிலிருந்து 21 ஆயிரம் கனஅடிநீர் கல்லணைக்கு திறந்துவிடப்படுவதால், அதில் 10 சதவீதம் கல்லணையிலிருந்து கீழணைக்கு நீர் திறந்துவிட வேண்டும் என விதி உள்ளது. எனவே கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 2100 கனஅடிநீர் திறந்துவிட வேண்டும். அப்படி திறந்துவிடப்பட்டால் கீழணை நிரம்பி அனைத்து பாசன வாய்க்கால்களிந் நீர் திறந்துவிடப்படும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் துணைத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.