திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்தபோது செய்யப்பட்ட அலட்சியத்தால் சிறுநீரகக் குழாய் பாதி்த்து கைக்குழந்தையை தவிக்கவிட்டு பெண் ஒருவர் கட்டிலில் முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார்மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த மகேஷ் அம்ஜத் குமார் தனது மனைவி கார்த்திகைச் செல்வி (26) மற்றும் உறவினர்களுடன் ஆம்புலன்ஸில் வந்தார்.
பின்னர் அவர் ஆட்சியரிடம் அளித்த மனு:
தென்காசியில் டீ கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி கார்த்திகைச்செல்வி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தவர். எங்களுக்கு இசக்கிசிரீகரன் என்ற மகன் உள்ளார். 2 ஆவதாக கருத்தரித்தது முதல் தென்காசி அரசு மருத்துவமனையில் கார்த்திகைச்செல்வி சிகிச்சைப் பெற்று வந்தார். 9-7-2014 இல் எங்களுக்கு 2 ஆவதாக ஆண்குழந்தை பிறந்தது. அன்று மாலையில் எனது மனைவிக்கு குடும்பநல அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து சில நாள்களில் கார்த்திகைச் செல்விக்கு அதிக வயிறுவலி ஏற்பட்டது. அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அறுவைச் சிகிச்சையின்போது சிறுநீரகக் குழாயை இணைத்து தையல்போட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக 10-8-2014 இல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்திகைச் செல்வியைச் சேர்த்தோம். ஆனால், அங்கு உடனடியாக மறு அறுவைச்சிகிச்சை செய்யாததால் கார்த்திகைச்செல்வியின் அச்சத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்து வட்டிக்கு கடன்வாங்கி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து 50 சதவிகிதம் அபாய கட்டத்தைத் தாண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
மருத்துவர்களின் அலட்சியத்தால் மிகுந்த பணவிரயமும், மனஉளைச்சலும் அடைந்து கைக்குழந்தையுடன் தவித்து வருகிறேன். எனவே, இதுகுறித்து விசாரித்து எனது மனைவிக்கு நல்ல சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் மருத்துவ உதவித்தொகை கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மகேஷ் கூறுகையில், எனது மனைவி கார்த்திகைச்செல்விக்கு ஏற்பட்ட நிலையால் எனது கைக்குழந்தை மிகவும் தவித்து வருகிறது. பணமற்ற சூழலும் மேல்சிகிச்சை மூலம் பூரண நலம் கிடைக்க முடியாமல் தடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனம் செலுத்தி எனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்ற உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிட்லர்

என் சுயசரிதை

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

