திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் மையவாடி (மயானம்) அமைக்கக்கோரி சடலம்போல வேடமணிந்து வந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சிலர் சடலம்போல வேடமணிந்து, சடலம் கோரிக்கைகளைக் கூறுவது போல பதாகைகளைத் தொடங்கவிட்டபடி நூதன முறையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:
மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மையவாடியில்தான் இன்று வரையிலும் இறந்த உடல்கள் அடக்கம் செய்யபட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு அப் பகுதி மக்களுக்கு மேலும் ஒரு மையவாடி இடம் ஒதுக்க வேண்டுமென பலதரப்பினரும் அரசை, மாநகராட்சி நிர்வாகத்தை, மக்கள் பிரதிநிதிகளை பல வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
அரசு தரப்பில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்பு அது ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு சடலத்தை நாய்கள் வெளியே இழுத்துப்போட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வருத்தம் ஏற்பட்டுள்ளது.
முன்னோர்களின் சடலங்கள் இதுபோன்ற சம்பவங்களால் இழிவுபடுத்தப்படுவதில் இருந்தும், பொதுமக்கள் சிறுகுழந்தைகள் தோற்று நோய்களின் பிடியில் சிக்காமல் இருக்கும் வகையிலும் புதிதாக ஒரு மையவாடி அமைக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

