கடையநல்லூர் அருகே யானைகள் புகுந்து அட்டகாசம்: தென்னை, வாழைகள் சேதம்
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப் பகுதிக்குள் புகுந்து வயல்களில் அட்டகாசம் செய்வதாகப் பொதுமக்கள் குற்றம்


நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப் பகுதிக்குள் புகுந்து வயல்களில் அட்டகாசம் செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை பகுதியில் வயல்களில் புகுந்த காட்டு யானைகள் 100 தென்னை,
500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தன. முன்னாள் அமைச்சர் நாகூர் மீரானுக்குச் சொந்தமான இடம் உள்பட யானைகள் மரங்களை நாசம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக இதுபோல் நடைபெறுவதாகவும், வனத்துறையிடம் புகார் தெரிவித்தால், ஒரு வாழைக்கு ஒரு ரூபாய் நிவாரணம் தருவதாகக் கூறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...