அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடும்ப நல நீதிமன்றம் திறப்பு விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:36 am

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே, முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடங்களை ஆய்வு செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி்மன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைத்து செயல்படுத்த அனுமதி வழங்கினர். இதன் அடிப்படையில் மாவட்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குடும்ப நல நீதிமன்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.