அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:36 am

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கூமாப்பட்டி, ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் தர்மலிங்கம் (17). இவர் கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவரது தந்தை சந்தா  கட்டுவதற்கு கொடுத்த பணத்தை ஓராண்டாக தர்மலிங்கம் கட்டாமல் செலவழித்துவிட்டாராம். சந்தா முடிந்துவிட்டதாக நினைத்து ஓராண்டு கழித்து முத்தையா போய் சந்தா கட்டிய இடத்தில் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் சந்தா கட்டிய இடத்தில் உனது மகன் சந்தா கட்டவே இல்லை என்று கூறியுள்ளனர்.

வீட்டில் வந்து மகனிடம் ஏன் ஓராண்டாக சந்தா பணத்தைக் கட்டாமல் ஏமாற்றியுள்ளாய் என்று கேட்டுள்ளார் முத்தையா. இதில் மனம் உடைந்த தர்மலிங்கம், 22-ம் தேதி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டாராம். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி, புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.