கடலூர் நகராட்சி ஆணையாளர் காளிமுத்து கடந்த சனிக்கிழமை நடைபயிற்சி செல்லும் போது மர்மநபர்களால் தாக்கப்பட்டு கால், கை முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து நகராட்சி அலுவலர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடலூர் நகரசபை தலைவராக இருந்த அதிமுகவைச் சி.கே.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். நகராட்சி தலைவர் பதவியிடம் காலியானதால், துணைத்தலைவர் பதவி வகிக்கும் ஜி.ஜே.குமார், நகரசபை தலைவர் பொறுப்பேற்று கவனித்து வருகிறார். அதேபோன்று 42 வது வார்டு உறுப்பினர் சிறைதண்டனை பெற்றதால் பதவிநீக்கம் செய்யப்பட்ட வார்டு கவுன்சிலர் பதவியும் காலியாக உள்ளது.